எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள சத்யராஜின் ‘வெப்பன்’!

சத்யராஜ் நடிக்கும் தெலுங்கு படமான ‘வெப்பன்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகி வரும் ‘வெப்பன்’ ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ட்ரெய்லர் சத்யராஜை மனிதாபிமான மனிதராகக் காட்டுகிறது. வசந்த் ரவி மற்றும் அவரது குழுவினர் அவரை வீழ்த்துவதற்கான கடினமான பணியை மேற்கொள்வதாகவும் காட்டப்பட்டுள்ளது.

மில்லியன் ஸ்டுடியோவின் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

ஜிப்ரானின் துடிப்பான இசையும், பிரபு ராகவ்வின் அசத்தலான ஒளிப்பதிவும் கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள  வெப்பன் படம் ஜூன் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment