சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சஞ்சய் தத்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான `லியோ’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விஜய்யின் அப்பாவாகவும், அதே நேரத்தில் வில்லனாகவும் நடித்திருந்த நிலையில் அவருடைய கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனிடையே வேறு சில தமிழ் படங்களில் நடிக்க சஞ்சய் தத் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் `எஸ்கே 23’ படத்தில் மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சென்னையில் அதிரடி ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைவார் என்றும், அவர் இந்தப் படத்தில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வரும் நிலையில், மேலும் ஒரு முக்கியக் கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் நடித்து வருகிறார்.

தற்போது சஞ்சய் தத் இந்தப் படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment