சந்தானத்தின் கிக் படம் ஓடிடியில் வெளியீடு!

நடிகர் சந்தானம் நாயகனாக நடித்த அவருடைய 15-வது படமான ‘கிக்’ படத்தை லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்கி உள்ளார்.

‘தாராள பிரபு’ படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர்.

காதல், நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிய கிக் திரைப்படம் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் வரும் 29-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment