பிரபல இந்தித் திரைப்பட நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ் படங்களைத் தயாரித்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு சல்மான்கான், கேத்ரினா கைஃப் நடித்த ‘ஏக் தா டைகர்’, இந்நிறுவனத்தின் முதல் ஸ்பை யுனிவர்ஸ் படம்.
இதன் தொடர்ச்சியாக, ‘டைகர் ஜிந்தா ஹை’, ‘வார்’ ஷாருக்கான் நடித்த ‘பதான்’ ஆகிய படங்களை உருவாக்கினர். இந்தப் படங்கள் வசூலில் சாதனைப் படைத்ததை அடுத்து இப்போது ‘டைகர் 3’ படத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில் சல்மான் கான் நடிப்பில் உருவான டைகர்-3 படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியாகி இருக்கிறது.
மனிஷ் சர்மா இயக்கியுள்ள ‘டைகர் 3’ திரைப்படத்தில் சல்மான்கான் உடன் கத்ரீனா கைஃப் மற்றும் இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது.
– தேஜேஷ்