டிஜிட்டலில் வெளியாகும் ‘பூவே உனக்காக’!

விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கில்லி’ படம் சமீபத்தில் மீண்டும் திரைக்கு வந்து புதிதாக ரிலீசான பல படங்களின் வசூலை முறியடித்தது.

வசூல் சாதனை தொடர்ந்து நிகழ்த்தி வருவதால் விஜய் நடித்துள்ள பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை போன்ற வெற்றி படங்கள் மீண்டும் ரிலீசாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி வருகிறது.

1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் ‘பூவே உனக்காக’ படத்தில் விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார் ஜெய்கணேஷ், மதன்பாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் 90-ஸ் கிட்ஸ்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆனந்தம் ஆனந்தம், சொல்லாமலே போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

இந்நிலையில் ‘பூவே உனக்காக’ படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர படக்குழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் இரண்டு மாதங்களில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment