18 நாட்களில் ஒரே பகுதியிலேயே படமாக்கப்பட்ட திரைப்படம்!

பேசும் படம்:

1974-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘உங்கள் விருப்பம்’ திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, கே.ஏ.தங்கவேலு, எம்.ஆர்.ஆர்.வாசு, வி.கே.ராமசாமி, சசிகுமார், வி. கோபாலகிருஷ்ணன், சிஐடி சகுந்தலா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் 18 நாட்களில் ஒரே பகுதியிலேயே படமாக்கப்பட்டது.

இதை தயாரித்து, இயக்கியவர் சித்ரமகல் கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் விஜயபாஸ்கர், திரைக்கதை ஆசிரியர் பஞ்சு அருணாசலம்.

பஞ்சு அருணாசலம் இந்த படத்தின் சில காட்சிகளை கமல்ஹாசன் நடித்த “எல்லாம் இன்ப மயம்” படத்தில் மீண்டும் பயன்படுத்தினார். இரண்டு படங்களுக்கும் பஞ்சு கதை எழுதியிருந்தாலும், அவர் மாமனாரிடமிருந்து அனுமதி பெற்றார்.

படப்பிடிப்பின்போது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்-ல் எடுக்கப்பட்ட புகைப்படம் இது, இதில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, மற்றும் மாமனார் இடம் பெற்றுள்ளனர்.

– நன்றி: ரேணுகா முகநூல் பதிவு

Comments (0)
Add Comment