‘சின்னத்தம்பி’ – ஃபிளாஷ்பேக்!

சென்டிமெண்ட்களுக்குத் தமிழ் சினிமாவில் பஞ்சமே இல்லை என்றாலும், சிலவற்றில் இந்தக் கலவைக் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

அப்படி 1991 ஏப்ரலில் வந்த படம் – சின்னத்தம்பி. இயக்கியவர் பி.வாசு.

நடைமுறை வாழ்க்கையில் வெகுளித்தனமான இயல்புடன் நமக்கு முன் இருப்பவர்களை ‘வாழத் தெரியாதவர்கள்’, ‘வேஸ்ட்’ என்றும் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிற நாம்தான், திரையில் மலங்க மலங்க விழித்தபடி வெகுளித்தனமான கதாபாத்திரங்கள் வந்தால் மட்டும் கொண்டாடுவோம்.

அதே பார்முலா பட – நடிகர் பிரபு தாலி, கல்யாணம் என்றால் என்ன என்பது கூடத் தெரியாத வெகுளியாக, அதே சமயம் சுதி சுத்தமாகப் பாடத் தெரிந்த வெகுளியாக, வந்து கதாநாயகியான குஷ்புவை நெருங்குவதற்குள், அவருடைய பாசக்கார அண்ணன்கள் படுத்தும் பாடும், சின்னத்தம்பியான விதவைத் தாயான மனோரமாவின் வெள்ளைப்புடவையில் சாயத்தை ஊற்றவும், மனநலம் சரியில்லாத ஒருவரை வைத்து அவருக்குத் தாலி கட்ட வைப்பதுமாக வரிசையாக சென்டிமென்ட் காட்சிகள்.

மாலைக்கண் வியாதி வந்தவராக கவுண்டமணி வேறு ஒரு கலக்கு கலக்கியிருப்பார்.

இளையராஜாவின் மழைச்சாரல் பாடல்களும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கும் படத்தை தமிழக ஜனங்கள் அப்போது கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.

சின்னத்தம்பி படத்திற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சிப் பக்கம் நடந்தபோது – எடுக்கப்பட்ட ‘ஒர்க்கிங் ஸ்டில்’ இது!

பின்னால் சேரில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் படத்தின் நாயகி குஷ்பு.

Comments (0)
Add Comment