கதாநாயகிகளுக்கிடையில் ‘நாயகன்’!

பேசும் படம்:

கமல் ஒப்பனையில் அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டு நடித்த படங்களில் ஒன்று ‘அவ்வை சண்முகி’. தன்னை நாடகத்தில் வளர்த்தெடுத்த ‘அவ்வை சண்முகத்தின்’ பெயரைச் சூட்டி மதிப்பளித்திருப்பார்.

சாயலிலும் தன்னுடைய தாயார் ராஜலெட்சுமியின் தோற்றத்தை நினைவுபடுத்தியிருப்பார்.

நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் ஒப்பனையுடன் கலைஞரைச் சந்தித்திருக்கிறார். அந்தக் கால கதாநாயகிகளையும் சந்தித்திருக்கிறார்.

1996-ல் அவ்வை சண்முகி படப்பிடிப்பின்போது, பெண் வேடத்தில் உள்ள கமல்ஹாசனுடன் கே.ஆர்.விஜயா, மனோரமா, விஜயகுமாரி, எம்.என்.ராஜம் மற்றும் அஞ்சு அரவிந்த் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

 
 
Comments (0)
Add Comment