இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் வேட்டையன்!

ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடிகர் ரஜினியின் வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில், அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு நெல்லை, திருவனந்தபுரம், மும்பையில் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் கடப்பாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பஹத், ராணா டகுபதி ஆகியோரின் காட்சிகள் படமாக்கி வருகின்றனர். இந்த வாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment