ரூ.12 கோடி வசூலித்த ‘வித் லவ்’!

படக்குழுவை  நேரில்  பாராட்டிய ரஜினி!

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் சியோன் பிலிம்’ நிறுவனமும், எம்.ஆர்.பி. எண்டர்டெயின்  நிறுவனமும் இணைந்து தயாரித்த படம் ‘வித் லவ்’.

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன், கதாநாயகியாக நடித்துள்ளார்

கடந்த 6-ம் தேதி வெளிவந்த ‘வித் லவ்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலையும் குவித்து வருகிறது. கடந்த  6 நாட்களில் இந்தப்படம்  ரூ.11.70 கோடி வசூல் செய்துள்ளது.

இதனால், சவுந்தர்யா உற்சாகமாக இருக்கிறார்.

படத்தை அண்மையில் ரஜினிகாந்த் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.

படக்குழுவினரை தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவழைத்து, இயக்குநர் உள்ளிட்ட ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேரில், பாராட்டினார்.

படக்குழுவினர் உற்சாகத்தில் திளைத்தனர்.

  • பாப்பாங்குளம் பாரதி.
Comments (0)
Add Comment