தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ‘பாகுபலி’ தயாரிப்பாளர்களிடம் பேசிய போது அவர்கள் ‘பாகுபலி 3’ பற்றித் திட்டமிட்டு வருகிறார்கள் என்பது தெரிந்தது என்று கூறியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், ராணா டகுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’ திரைப்படம்.
தெலுங்கு சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவான இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகமும் வெளிவந்தது. இதுவும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாகுபலி’ முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் வட இந்தியாவிலும் பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. அவற்றின் வெற்றி தெலுங்குத் திரையுலகத்தையே மாற்றியது.
அந்த வகையில் ராஜமௌலி இந்திய அளவில் பெரிய இயக்குநர்களில் ஒருவராக மாறினார். தெலுங்கில் மட்டுமே தனது வியாபார வட்டத்தை வைத்திருந்த பிரபாஸ் அதன்பின் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார்.
இதையடுத்து ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கிய அடுத்த படம் ‘ஆர்ஆர்ஆர்’. அதே போல இந்தப் படமும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இதன் மூலமாக ராம் சரண், ஜூனியர் என்டிஆரும் பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளார்கள். இந்தப் படத்திலுள்ள பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.
‘பாகுபலி 2’ படம் வெளிவந்த பின்பே ‘பாகுபலி 3’ பற்றிய பேச்சுக்களும் எழுந்தது. ஆனால், அது எப்போது உருவாகும் என்பது குறித்த நிலையான தகவல் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் ‘பாகுபலி-1’ படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ‘பாகுபலி’ தயாரிப்பாளர்களிடம் பேசியுள்ளார்.
அதில் அவர்கள் ‘பாகுபலி 3’ பற்றி திட்டமிட்டு வருகிறார்கள் என்பது தெரிந்தது என்று கூறியுள்ளார்.
இதனிடைய ராஜமௌலி, மகேஷ் பாபு வைத்து சாகசம் நிறைந்த கதைக்களத்தில் கொண்ட புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்து வெளியிட்ட பின்பு ‘பாகுபலி 3’ படத்தின் வேலைகளில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.
#பாகுபலி_3 #Baahubali_3 #தகவல் #information #தயாரிப்பாளர்_ஞானவேல்_ராஜா #Producer_Gnanavel_raja #நேர்காணல் #Interview #ராஜமௌலி #Rajamouli #பிரபாஸ் #Prabhas #தமன்னா #Tamannaah #அனுஷ்கா #Anushka #ராணா_டகுபடி #Rana_tagupathy #ராம்_சரண் #Ram_charan #ஜூனியர்_என்டிஆர் #Junior_NTR #மகேஷ்_பாபு #Mahesh_babu