அடுத்த ஆண்டு வெளியாகும் ‘பிரேமலு-2’!

இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் பிரேமலு.

இந்தப் படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரையரங்கில் வெற்றிப் பெற்ற இந்தத் திரைப்படம் கடந்த 12ம் தேதி ஓடிடி-யில் வெளியானது.

இந்நிலையில், பிரேமலு படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும், 2025ம் ஆண்டு தொடக்கத்தில் ‘பிரேமலு-2’ வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment