ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் திரைப்படம் ஹிந்தியில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார்.
‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் விலக, பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இப்படத்தை இயக்கினார்.
அந்தகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர்.
சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளால் படம் வெளியகாமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது. இதனிடையே அந்தகன் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் நாளை (ஜூலை-24) வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அந்தகன் ஆந்தெம் (Anthagan anthem) என்கிற இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் பாடியுள்ளனர்.