திரையுலகில் பிரபல இயக்குநராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதற்கு அடுத்து, தானே நடித்து இயக்கிய படம் ‘லவ் டூடே’. இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை விஜய்யின் கோட் படத்தை இயக்கி மிகச் சிறந்த படைப்புகளை அளித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அண்மையில், இந்தப் படத்திற்கு ‘டிராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது என இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது எனவும் அறித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அடுத்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
#பிரதீப்_ரங்கநாதன் #Pradeep_ranganathan #இயக்குநர்_அஸ்வத்_மாரிமுத்து #Director_Aswath_marimuthu #ஏஜிஎஸ் #AGS #டிராகன் #Dragon #முதல்_பார்வை #First_look #போஸ்டர் #Poster