புன்னகையும் பொன்மனச் செம்மலும்!

-பேசும் படம்

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளையொட்டி அவரது குடும்ப உறுப்பினரும் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான வழக்கறிஞர் முனைவர் குமார் ராஜேந்திரன் பொன்மனச் செம்மலை நினைவு கூரும் விதமாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன், குமார் ராஜேந்திரன், அவரது தாயும் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளான முனைவர் லதா ராஜேந்திரன், அவரது கணவர் ராஜேந்திரன், தங்கை செல்வியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment