ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் ‘பராசக்தி’!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்க ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியத்தால் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டில் 600-க்கும் அதிகமான திரைகளில் இப்படம் திரையிடப்பட்டது. பல வெளிநாடுகளிலும் படம் வெளியானது.

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் வசூலில் அடிவாங்கியது.

‘பராசக்தி’ படம் வெளிவந்து 28 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘பராசக்தி’ படத்தின் இறுதி வசூல் ரூ. 90 கோடி என திரை வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், படக்குழு இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி. 

Comments (0)
Add Comment