விஜய் சேதுபதியின் படத்தை இயக்கும் பாண்டிராஜ்!

விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலாகி இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம் குறித்து அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தின் இயக்குநர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

விஜய் சேதுபதி அடுத்த திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உட்பட சில படங்கள் குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் அவர் இணையும் படமும் குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே ‘கடைசி விவசாயி’ படத்தின் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘விண்ட்’ என்று டைட்டில் வைக்கப்பட்ட ஒரு வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment