நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – ஜி.வி கொடுத்த அப்டேட்!

தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.

இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியாகி இப்போதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடி இருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தனுஷ் நான்காவதாக படமாக ‘இட்லி கடை’ என்ற படத்தையும் இயக்கி, நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment