பிறந்தநாளில் வெளியான நயன்தாராவின் ‘ராக்காயி’ டீசர்!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரது பிறந்த நாளான நவம்பர் 18.11.2024 இன்று ‘ராக்காயி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன.

இவர்களின் திருமணம் சம்மந்தமாக ஆவணப்படம் ‘Nayanthara: Beyond the fairy tale’ இன்று வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜவான்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து ‘அன்னபூரணி’ படம் கலவையான விமர்சனம் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது.

தற்போது ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’, ‘டாக்சிக்’, ‘தனி ஒருவன் 2’, ‘குட் பேட் அக்லி’, ‘மூக்குத்தி அம்மன்-2’, ‘மகாராணி’ உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள ‘ராக்காயி’ படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த டீசரில் நயன்தாரா கையில் உலக்கை வைத்திருக்க, அவருக்கு முன் பெரிய ரவுடிகள் இருப்பது போல காட்சிகள்  அமைந்துள்ளது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment