பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா!

ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர், படத்தில் நடிப்பதை நடிகைகள் அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்கள்.

ஆனால், நம்ம ஊர் நயன்தாரா, பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்த தகவல் இப்போது கசிந்துள்ளது.

அவர் நிராகரித்த படம் ‘வக்கீல் சாப்’. அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் தெலுங்கு ரீமேக் இது. இந்தப் படத்தை அவர் நிராகரிக்க காரணம் உள்ளது.

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணுடன் நடிக்க நயன்தாராவுக்கும் ஆசைதான். ஆனால், அந்தக் கதாபாத்திரம் மிகவும் சிறியது என்பதால் அவர் யோசித்தார். நடிக்க மறுத்து விட்டார். அவருக்கு பதிலாக ‘வக்கீல் சாப்’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment