அடுத்த படத்தை இயக்கத் தயாரான கேஜிஎப் இசையமைப்பாளர்!

2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியான படம் ‘கேஜிஎப்’. இந்தப் படம் ஆக்ஷன் கதையாக உருவாகி இருந்தது.

ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்தது. ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.

படத்தைபோலவே இதில் வரும் இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் ரவி பஸ்ரூரின் பெயர் இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு பிரபாஸ், சுருதிஹாசன், பிருத்விராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘சலார்’ படத்திற்கும் இசையமைத்திருந்தார்.

பிரபல இசையமைபாளராக இருக்கும் ரவி பஸ்ரூர் சில படங்களையும் இயக்கி உள்ளார். கர்கார், மண்டாலா, கிர்மித், கடகா உள்ளிட்ட 5 படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், ரவி பஸ்ரூர் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு ‘வீர சந்திரஹாசா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ரசனையுள்ள இசையமைப்பாளரிடம் நிச்சயம் நல்ல படத்தை எதிர்பார்க்கலாம்.

Comments (0)
Add Comment