டி.இமான் இசையில் பாடிய சைந்தவி!

தமிழ் திரை உலகின் பிரபல பாடகிகளில் ஒருவர் சைந்தவி. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘அந்நியன்’ திரைப்படத்தில் ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’ என்ற பாடலை பாடியதன் மூலம் திரையுலகில் பாடகியாக என்ட்ரி ஆனார்.

அதன் பிறகு ஏஆர் ரஹ்மான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஸ்ரீகாந்த் தேவா, யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், மணி ஷர்மா, ஜி.வி பிரகாஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கம்போஸ் செய்த பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அம்மா என்னும் மந்திரமே’ என்ற பாடல் இவர் பாடியது. இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ‘பேபி அண்ட் பேபி’ என்ற திரைப்படத்திற்கு டி இமான் இசையமைக்கும் நிலையில் இந்தப் படத்திற்காக சைந்தவி பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்தப் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இந்தப் பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாக உள்ளது. ரியோ ராஜ், யோகிபாபு, சத்யராஜ் உட்பட பலர் நடித்த இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார்.

– தேஜேஷ்.

Comments (0)
Add Comment