பிரபாசுக்கு ஜோடியாகும் மிருணாள் தாகூர்!

ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகை மிருணாள் தாகூர்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடித்திருந்தார். ஹனு ராகவபுடி இயக்கிய இந்தப் படத்தில் இளவரசியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மிருணாள் தாகூர்.

இதையடுத்து மிருணாள் தாக்கூருக்கு சில தெலுங்கில் ஹாய் நன்னா மற்றும் தி ஃபேமிலி ஸ்டார் பட வாய்ப்புகள் கிடைத்தன.

இந்நிலையில் ஹனு ராகவபுடி இயக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஆக் ஷன் படமான இதில் பாகிஸ்தான் நடிகை சஜல் அலி நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் மிருணாள் தாகூரும் நாயகியாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments (0)
Add Comment