இளசுகளின் ரசனையில் ‘ஒன்ஸ் மோர்’ பட “மிஸ் ஒருத்தி” பாடல்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அர்ஜூன் தாஸ். இவர், கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துப் பிரபலமானார்.

அதன்பின், அநீதி, ரசவாதி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரகிர்கர்களிடையே கவனம் பெற்றார் அர்ஜூன் தாஸ்.

இதையடுத்து, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.

‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஒன்ஸ் மோர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்களான ‘மிஸ் ஒருத்தி’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் ரைலாகி வருகிறது.

Comments (0)
Add Comment