வதந்தியால் வருத்தப்படும் மீனாட்சி சவுத்ரி!

தமிழில், கொலை, சிங்கப்பூர் சலூன், தி கோட் போன்ற படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி.

தெலுங்கில் லக்கி பாஸ்கர் படத்திலும் நடித்துப் பெயர் வாங்கினார். இந்தியிலும் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாக வதந்தி பரவியது.

இதுகுறித்து மனவருத்தத்தோடு விளக்கமளித்துள்ள மீனாட்சி சவுத்ரி, “சுஷாந்த் என் நண்பர். எங்களுக்கிடையே இருப்பது நட்பு மட்டும்தான். காதலிப்பதாக வரும் செய்திகள் வதந்தி.

நான் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாதம் ஒரு ஹீரோவுடன் என்னை இணைத்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.

தங்களுக்கு பரபரப்பான செய்தி வேண்டும் என்பதற்காக என் பெயரை அவமானப்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் மீனாட்சி சவுத்ரி.

Comments (0)
Add Comment