வரவேற்பைப் பெற்ற “மெதக்குது காலு ரெண்டும்” பாடல்!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரதர்’.

உறவுகளை மையப்படுத்தி குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இதனிடையே, ‘பிரதர்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தத் படம் வரும் 31ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெதக்குது காலு ரெண்டும்’ என்ற பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Comments (0)
Add Comment