வெற்றிக் கொண்டாட்டத்தில் மார்க் ஆண்டனி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் மார்க் ஆண்டனி. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் வெற்றி விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் குமார், நிழல்கள் ரவி, இப்படத்தில் சில்க் வேடத்தில் நடித்த விஷ்ணுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வெற்றி விழாவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், நான் கூறும் கதையை விஷால் கேட்டவுடனேயே படம் பண்ண ஒப்புதல் அளித்தார்.

நேர்கொண்ட பார்வையில் அஜித்தை பார்த்து வந்த பின் அவர் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தார். இந்த வெற்றியை அவருக்கு dedicate பண்ணுவதாக அவர் தெரிவித்தார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், மார்க் ஆண்டனி மறக்க முடியாத படமாகி விட்டது. ஆதிக் கதை கேட்டதும் சூப்பராக இருந்தது. He is the director for future. ரசிகர்களுக்கு நன்றி.

மக்களை சந்தோசப்படுத்தியது என்பதே படத்தின் மிகப் பெரிய வெற்றி. அன்பே ஆருயிரே படத்துக்கு பின் நான் விட்ட இடத்தை மார்க் ஆண்டனி மூலம் 75 சதவிகிதம் நிரப்பி விட்டாக அவர் கூறினார்.

நடிகர் விஷால் பேசுகையில், 19 வருடம் கழித்து நான் இங்கே நிற்கிறேன் என்றால் பெருமைப்படுவது என் அப்பா தான். என்னுடைய கேரியரில் அதிக பட்ஜெட் படமிது. இந்த படத்தின் மூலம் எனக்கு 2 அண்ணன்கள் கிடைத்திருக்கிறார்கள்‌. சுனில், எஸ்.ஜே.சூர்யா.

விநாயகர் சதுர்த்தியில் வெளியாக இருந்த மதகதராஜா தற்போது வரை வெளியாகவில்லை‌. ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி மார்க் ஆண்டனி ரிலீஸாகி வெற்றி பெற்றதாக அவர் கூறினார்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment