நடிகர் மோகன்லால் நடிப்பில், லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார்.
மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் முதல் பாடலான புன்னாரா காட்டிலே பூவனத்தில் பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
– தேஜேஷ்