மகாராஷ்டிராவின் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய படலம் துவங்குகிறது. Sony மராத்தி மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் கோன் ஹானர் க்ரோர்பதி (kon honar Crorepati) நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, பத்மஸ்ரீ விருது பெற்ற மாதுரி தீக்ஷித் (Madhuri dixit) இணையவுள்ளார்.
மராத்தி தொலைக்காட்சியின் புகழ்பெற்ற அறிவுசார்ந்த வினாடி வினா நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘Kon Honar Crorepati’ நிகழ்ச்சிக்கு இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்து இருக்கிறது.
இந்த புதிய மாற்றம் ‘Aata Khel Badalnar’ என்ற பிரச்சாரத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரணமான மனிதர்களின் கதைகள் முக்கியத்துவம் பெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு கேள்வியும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக நிகழ்ச்சியாக உருவாகிறது.
இந்த புதிய பயணத்தைத் தொடங்குவது குறித்துப் பேசிய மாதுரி தீக்ஷித்: “அறிவு மற்றும் விடாமுயற்சியின் சக்தியின் மூலம் மக்களுக்கு வேகம் அளிக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, ‘Kon Honar Crorepati’ என்பது வினாடி வினா நிகழ்ச்சி மட்டுமல்ல ஆர்வம், நம்பிக்கை மற்றும் கனவு காணும் துணிச்சலைக் கொண்டாடும் நிகழ்ச்சி. இது உத்வேகம் கொடுக்கும்.
பெருமைமிகு மகாராஷ்டிரப் பெண்ணாக, போட்டியாளர்களைச் சந்தித்து அவர்களின் கதைகளைக் கேட்டு, அந்த பிரபலமான Hot Seat-ல் அவர்களின் கனவுகள் வெற்றியடையும் தருணங்களைக் காண ஆவலுடன் இருக்கின்றேன்.” என்றார்.