லாரன்ஸுக்கு வில்லனாகும் மாதவன்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் வசூல் ரீதியகாவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில், ஹண்டர், கால பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில்  ‘பென்ஸ்’ படத்திலும் நடிக்கிறார். 

‘லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸி’ன் ஒரு பகுதியாக இந்தப் படம் உருவாகிறது.

சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

தற்போது, இந்தப் படத்திற்கு நடிகர் மாதவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment