சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்!

ரவுடி பேபி பாடல் யூடியூபில் 150 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

2018-ம் ஆண்டின் இறுதியில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி-2 திரைப்படம் வெளியானது. படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி என்ற பாடல், வெளியாகி 2 ஆண்டுகள் முடிவதற்குள்ளே யூடியூப்பில் 100 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தமிழ் பாடல் என்ற பெருமையை பெற்றது. தற்போது 150 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

யுவன்சங்கர் ராஜாவின் இசையாக இருந்தாலும் சரி, அவரது குரலில் ஒலிக்கும் பாடலாக இருந்தாலும் சரி கண்டிப்பாக அது ஹிட் தான்.

அதேநேரத்தில் ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவா நடன ஆசிரியராக இருக்க, நடிகர் தனுஷ், பாடகி த்தீ (Dhee) ஆகியோர் குரல் கொடுக்க, பாடல் வெகுவாகவே அனைவரின் மனதையும் ஈர்த்தது.

பொதுவாகவே யுவன்சங்கர் ராஜாவுக்கும், தனுஷுக்கும் என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன.

இருவரும் ஒன்றிணையும் போது, நடனம், இசை, பாடல் என எதிலும் குறையில்லாமல், தள்ளாடுபவர்களையும் தானே எழுந்து ஆட்டம் போட வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடல் தற்போது யூடியூபில் 150 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்த ரவுடி பேபி உலக அளவில் யாரும் படைக்க முடியாத சாதனையை பெற்று வைரலாகி வருகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment