எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு கூண்டுப் பறவை!

எழுத்தாளர் தமயந்தி

பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த ஒரு ஓடிடி சீரியஸிற்காக அவரைப் பற்றி ஆராய்ச்சியில் அவரது சுயம் பற்றி நிறைய அறிந்துகொள்ள முடிந்தது.

அந்த வெப் சீரிஸ் நிகழவில்லை. அதன் காரணம் அதன் முக்கிய சர்ச்சைகள் நிறைந்த உள்ளடக்கம்.

ஏனெனில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை பூராவும் உண்மை என்று அறியப்பட்டது எல்லாமே உண்மையாக இல்லாமல் இருந்தது.

அவர் சதாசிவம் அவர்களின் இறப்பு வரைக்குமே ஒரு கூண்டுப் பறவையாக – ஒரு சிறைப் பறவையாகத்தான் வாழ்ந்துவந்திருக்கிறார்.

டி.எஸ். ஜார்ஜ் எழுதிய புத்தகம் இதை மிக அற்புதமாக வெளிக்கொண்டு வந்தது.

எழுத்தாளர் வாஸந்தி அவர்களின் பேட்டியில் அவர் பகிர்ந்து இருந்த விஷயங்கள் அனைத்துமே, அவர் சதாசிவத்தின் கைப்பாவையாகவே வாழ நிர்பந்திக்கப்பட்டு இருப்பதை தெளிவாக எடுத்துச்சொல்லியது.

மிக அற்புதமான மனுசியாக இருந்த அவர் மேல் ஒரு பிராமணச்சாயம் வலுக்கட்டாயமாக பூசப்பட்டது சதாசிவம் அவரை ஒரு ஏடிஎம் மெஷின் ஆகவும்.

இருவருக்குள்ளும் எந்த ஒரு பெரிதான ஈர்ப்போ அல்லது நெருக்கமோ இல்லாமல் இருந்தார்கள் என்பதை மிகத் தெள்ளத்தெளிவாக பலரை சந்தித்து ஆராய்ந்தபோது புலப்பட்டது.

ஆனால், எம்.எஸ்.சுப்புலட்சுமி மீது இருக்கக்கூடிய பக்தி சார்ந்த ஒரு பிம்பம் இந்த உண்மைகளுடன் கூடிய வெப் சீரிசை சாத்தியமாக விடவில்லை.

அதன் மிக சுவாரசியமான விஷயங்கள் இன்னும் என் மனசுக்குள் அப்படியே தேங்கிக் கிடக்கிறது.

இந்த வருடம் அதைப்பற்றி ஒரு புத்தகமாவது எழுதிவிட்டால் நிச்சயமாக நிம்மதியாக இருக்கும்.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment