13 மில்லியன் பார்வைகளைக் கடந்த லியோ 2-ம் பாடல்!

நடிகர் விஜய்யின் 67-வது படமான ‘லியோ’, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

14 ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி என 4 படங்களின் வரிசையில், 5-வது முறையாக விஜய்-த்ரிஷா கூட்டணி அமைந்துள்ளது.

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மாஸ்டர் படத்துக்கு பின் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2-வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளனர்.

கத்தி, மாஸ்டர், பீஸ்ட், படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக விஜய்யின் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலை படக்குழு வெளியிட்டது.

நீண்ட நாட்களாக படத்தின் எந்த அப்டேட்டும் வராத நிலையில், சமீபத்தில் படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போஸ்டர்கள் வெளியாகின.

இதனிடையே இன்று நடக்க இருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, படத்தின் 2-ம் பாடலை படக்குழு நேற்று வெளியிடப்பட்டது.

படத்தின் 2-ம் பாடலான ‘Badass’ பாடலை விஷ்ணு எடாவன் எழுத, அனிருத் பாடி இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் யூடியூபில் 13 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

லியோ படத்தில் நான் ரெடி, படாஸ் என மொத்தம் 2 பாடல்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment