வெளியானது தனுஷின் ‘குபேரா’ டிரெய்லர்!

நாகார்ஜுனாவும் தனுஷும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘குபேரா’. இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

முன்னணித் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும்.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குபேரா’ படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியது.  

இந்நிலையில், குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘குபேரா’ டிரெய்லரை வெளியிட்டார்.

குபேரா டிரெய்லர் – https://www.youtube.com/watch?v=Eyl4sQFkQiM

Comments (0)
Add Comment