சமூக அக்கறையுள்ள படமாக உருவாகியுள்ள ‘கழிப்பறை’!

கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கழிப்பறை’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், இயக்குநர் கிஜு, இசையமைப்பாளர் தீனா, பாடகர் உன்னி கிருஷ்ணன்,

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தீனா: தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை தர முன்வந்திருக்கும், அமித்குமார், ப்ரீத்தி தம்பதிகளுக்கு நன்றி. அவர்களது பெண் குழந்தை வன்ஷிகாவை இந்தப் படத்தில் அருமையாகப் பாட வைத்துள்ளார்கள்.

நான்கு பாடல்களும் மிக அருமையாக உள்ளது. ஸ்ரீகாந்த் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். கழிப்பறை நல்ல கருத்து கொண்ட படம். உலகில் யாரும் உயர்ந்தவனில்லை. அனைவருமே நம் உடலில் கழிப்பறையை வைத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

இதைப் புரிந்து கொண்டு, அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் பல கிராமத்தில் கழிப்பறை இல்லாத நிலை இருந்தது. அதை மத்திய அரசு மாற்றி வருகிறது.

கழிப்பறை இல்லாத வீடு இல்லாத நிலை இன்று வந்துள்ளது. இந்தக் கருத்தைப் பேசும் இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.

Comments (0)
Add Comment