கடந்த 2018-ம் ஆண்டில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நெல்சன் திலீப்குமார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களை இயக்கினார் நெல்சன். இதையடுத்து திரையுலகில் தயாரிப்பாளராக கலமிறங்கியுள்ளார்.
‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி இவருடைய தயாரிப்பில் முதல் படத்தில் கதாநாயகனாக கவினை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் நெல்சன்.
சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், ‘பிளடி பெக்கர்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இதில் யாசகராக நடித்துள்ள கவினின் தோற்றம் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.