‘பைட் கிளப்’ படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

உறியடி விஜயகுமார் நடித்துள்ள பைட் கிளப் படத்தை பார்த்தபின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வெளியீட்டில், இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உறியடி விஜயகுமார் நடித்துள்ள பைட் கிளப் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படத்தை மிகவும் ரசித்ததாகவும், அற்புதமான காட்சிகள், படத்தொகுப்பு, இசையுடன் கூடிய ஆக்‌ஷன் படமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், விஜய்குமார் ஒரு சிறந்த ஹீரோவாக வேண்டுமென தான் விரும்பியதாகவும், இப்படம் அவரை அந்த இடத்திற்கு அழைத்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment