‘கங்குவா’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’.

இந்தப் படத்தில் பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரித்திர படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்திற்கு புரொமோஷன் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அடுத்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பில் வரும் அக்டோபர் 20-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment