‘கல்கி 2898 ஏடி’ படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்கான ரன்னிங் டைம் மற்றும் சான்றிதழை சென்சார் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த `கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாகவும் வேறு சில முக்கியக் கேரக்டர்களில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கல்கி அவதார இதிகாச புராணங்களை அடிப்படையாகக் கொண்டும், அதில் தற்காலிக விஞ்ஞானத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என்றும் இந்தப் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் `U/A’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
– தேஜேஷ்