‘சிக்கந்தர்’ படத்தில் இணையும் காஜல் அகர்வால்?

தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே – 23’ படத்தையும் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ரூக்மணி வசந்த் மற்றும் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்கின்றனர்.

ஶ்ரீலக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் ‘சிக்கந்தர்’ படம், பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இதில் சத்யராஜ் வில்லனாக நடிக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இதன் படப்பிடிப்பு மும்பையில் கடந்த மாதம் தொடங்கியது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் காஜல் அகர்வால் இணைந்துள்ளதாகவும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments (0)
Add Comment