ரசிகர்களை மிரட்டும் ‘ப்ளாக்’ டிரெய்லர்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜுவா. இவர் தற்போது பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் நடித்துள்ளார்.

த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்தப் படத்திற்கு ‘பிளாக்’ என்று படக்குழு பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ஜுவா, ப்ரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இல்லாமல் தற்போது இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த டிரெய்ரில் திகில் ஊட்டும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வெளியிட்டு தேதியை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Comments (0)
Add Comment