90-கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவாக இருப்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்று இருக்கிறது.
அந்த வகையில் கடந்த 2010-ம் ஆண்டு ஹரால்ட் ஸ்வார்ட் இயக்கத்தில் ஜாக்கி சான் நடிப்பில் ‘கராத்தே கிட்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமில்லாமல் 300 மில்லியன் டாலருக்கு மேல் வசூலை ஈட்டியது இந்தப் படம்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ஜாக்கி சான் மாஸ்டர் ஹான் என்ற அதே கதாபாத்திரத்தில் மீண்டும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றார்.
இந்தப் படத்தில் பென் வாங் லி பாங் என்பவர் புதிய மாணவராக நடிக்கிறார். இவர்களுடன் ஜோசுவா ஜாக்சன், ஷானெட் ரெனீ வில்சன், மிங் நாவென், அராமிஸ் நைட், சாடி ஸ்டான்லி, வியாட் ஓலெப் மற்றும் ஜெனிபர்லின் கிறிஸ்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு மே 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.