‘மங்காத்தா2’-க்காக ரசிகனாகக் காத்திருக்கிறேன்!

அர்ஜூன் நெகிழ்ச்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜூன், ராய் லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த படம் ‘மங்காத்தா’.

2011-ம் ஆண்டு வெளியான இப்படம் அஜித்தின் 50-வது படமாக வெளியாகி மிகப்பெரிய ‘ஹிட்’ அடித்தது.

15 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலையும் வாரிக் குவித்தது.

இந்தப் படத்தின் 2-வது பாகம் உருவாகுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இதற்கிடையில் ‘மங்காத்தா’ படம் குறித்து நடிகர் அர்ஜூன் தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘மங்காத்தா-2’ படத்துக்கான கதை ஏற்கனவே தயாராகி விட்டதாகவும், ஆனால், சில காரணங்களால் அந்தத் திட்டம் தாமதமாகி போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு, “அனைவரையும் போல ‘மங்காத்தா-2’ படத்தை நானும் எதிர்பார்க்கிறேன். கூடிய விரைவில் அது நடக்கும் என்று நம்புகிறேன்” என்றும் அர்ஜூன் குறிப்பிட்டார்.

இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறது.

Comments (0)
Add Comment