‘வாமனன்’, ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் உருவான ‘இறைவன்’ படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.
நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்துக்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் 2-வது முறையாக இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனி ஒருவன்-2 படத்திலும் இணைந்து நடிக்க உள்ளனர்.
‘இறைவன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வெளியீடு தள்ளிப்போனது.
இதனால் ‘இறைவன்’ படம் நாளை (28-ம் தேதி) திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தில் இருந்து துணுக்கு காட்சி (Sneak Peek) வெளியாகி உள்ளது.
– தேஜேஷ்