‘மலை’ என்பது நம்பிக்கை!

இயக்குநர் ஐ.பி. முருகேஷ்

சுயநலத்தின் கோரப்பசிக்குச் சக மனிதனைப் பலியாக்குவது ஆதியிலிருந்து தொட்டுத் தொடரும் மனித இயல்பாக இருந்து வருகிறது.

தற்போது, சுற்றுச்சூழலையும் அவன் பலி கேட்கும்போது, அதற்கு இயற்கையின் பதில் என்னவாக இருந்தது என்பதுதான் இந்தப் படம்” என்று பேசத் தொடங்கினார் ‘மலை’ படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஐ.பி. முருகேஷ்.

லட்சுமி மேனன், யோகிபாபு, காளி வெங்கட் நடிப்பில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, இமான் இசை, யுகபாரதியின் வரிகள் என உருவாகியிருக்கும் இப்படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

“எனக்கு இயற்கையுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது பிடிக்கும். மலையைப் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கைப் பிறக்கும். ஆறுதல் கிடைக்கும். நான் மதுரைக்காரன் என்பதால் அருகிலிருக்கும் மேற்கு மலைத் தொடரில் உள்ள ஊர்களுக்கு வாய்ப்பு அமையும்போதெல்லாம் பயணம் செய்வேன்.

அப்படி மீண்டும் மீண்டும் மலையூர்களுக்குச் செல்லும்போது ஓரிடத்தில் முந்தைய முறை பார்த்த ஒரு மலையையே. காணோம். அப்போது நம் வீட்டில் இருந்த ஒருவரை இழந்ததைப்போல் துக்கம் மனதை அழுத்தியது.

தவிர, நான் ஒரு சுற்றுலாப் பயணியைப் போல் மலைப் பகுதிகளுக்குச் செல்வதில்லை. மலை மக்களோடு நெருங்கிப் பழகிவிடுவேன்.

அப்படி நான் பார்த்த ஓர் உண்மையான மனிதரையே யோகிபாபு இப்படத்தில் ஏற்று நடித்துள்ள சுருளி கதாபாத்திரமாக எழுதியிருக்கிறேன்.

அந்த உண்மையான மனிதருடன் தொடர்புடைய ஓர் உண்மைச் சம்பவத்தையே இதிலும் கிளைமாக்ஸ் ஆக வைத்திருக்கிறேன்”

-ஆர்.சி.ஜெயந்தன்.

நன்றி: இந்து தமிழ் திசை.

Comments (0)
Add Comment