பழந்தமிழ் வார்த்தைகளில் புதிய பாடல்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் – 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனிருத் இசையமைத்த இந்தப் படத்தின் முதல் பாடலான ‘பாரா’ கடந்த மே. 21 அன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவதுப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கவிஞர் தாமரை எழுதிய “நீலோற்பம் நீரில் இல்லை” என்று தொடங்கும் இந்தப் பாடலை, அபய் மற்றும் ஷ்ருதிகா சமுத்ரலா பாடியுள்ளனர்.

நீலோற்பம் என்றால் நீலநிற அல்லி மலர் எனக் கூறுகின்றனர். இலங்கையின் தேசிய மலராக இது இருப்பதாகவும் கூறப்படுகிறது.

#இயக்குநர்_ஷங்கர் #Director_Shankar #கமல்ஹாசன் #KamalHaasan #இந்தியன்_2 #Indian_2 இசை_வெளியீட்டு_விழா # Indian_2_Audio_Launch #நீலோற்பம்_நீரில்_இல்லை_பாடல்  #neelorpam_song