‘வடக்கன்’ – ‘ரயில்’ ஆக மாறியது எப்படி?

தயாரிப்பாளர் வேடியப்பன்
‘வடக்கன்’ எனப் பெயரிடப்பட்ட படத் தலைப்புக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்ததையடுத்து படத்தின் பெயர் ‘ரயில்’ என மாற்றப்பட்டது.
இந்த பெயர் மாற்றம் குறித்து படத்தின் தயாரிப்பாளரும் எழுத்தாளரும் புத்தக விற்பனையாளருமான ‘டிஸ்கவரி’ வேடியப்பன் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி.

****

திரைப்படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் பெற அனுப்புவதற்கு முன்பாக குறு முன்னோட்டம் ஒன்றை வெளியிட்டோம். அப்போதே திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்தோம்.

இதனால், தணிக்கைக் குழுவினர் திரைப்படத்தைப் பற்றிய சில முன் கருத்துகளோடு படத்தைப் பார்க்க வந்திருக்கிறார்கள். ஆனால் படம் பார்த்து முடித்ததும் அவர்களால் ஓர் இடத்தில்கூட கட் சொல்ல முடியவில்லை. பாராட்டவும் செய்தார்கள்.

என்றாலும் தலைப்பில் வந்து நின்று விட்டார்கள். வடக்கன் என்கிற சொல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களைக் கேலி கிண்டல் செய்வதாகவும் பிரிவினையை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என்று கூறித் தலைப்பை மாற்றச் சொல்லி விட்டார்கள்.

பல தலைப்புகளையும் சொல்லி அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ரயில் இறுதியானது. இந்தத் தலைப்பு எங்களுக்கு மட்டுமல்ல இப்போது எல்லாருக்குமே பிடித்திருக்கிறது.

அந்த வகையில் தணிக்கைக் குழுவுக்கு நன்றி. ரயில் என்கிற இந்தச் சிறப்பான தலைப்பைக் கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமி. அவருக்கும் எங்கள் குழு சார்பில் நன்றி”.

-நன்றி: இந்து தமிழ் திசை 14.06.2024.

Comments (0)
Add Comment