‘தேவாரா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜூனியர் என்டிஆர் நடித்த, தெலுங்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘தேவாரா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து ரசிகர்களிடையே உற்சாக அலையை எழுப்பியுள்ளது. ஆரம்பத்தில் அக்டோபர் 10 என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 27 அன்று திரையிடப்பட உள்ளது.

கடலோர நிலங்களின் அழகிய பின்னணியில் அமைக்கப்பட்ட ‘தேவரா’, இயக்குநர் கொரட்டாலா சிவாவால் இயக்கப்படுகிறது. இந்தப் படம் நடிகை ஜான்வி கபூருக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இது தென்னிந்திய சினிமாவில் அவரது அறிமுகம் மட்டுமல்லாமல் ஜூனியர் என்டிஆருடன் அவரது முதல் படமாகும்.

இந்தப் படத்தில் சைஃப் அலிகான் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடிக்க உள்ளார். ‘ஆர்ஆர்ஆர்’ வெற்றியைப் போலவே, ‘தேவரா’வும் அதிரடி காட்சிகள் நிறைந்த படமாகும். 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் படத்தில் விஷுவல் எஃபெக்ட்டுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

‘தேவாரா’ ஜூனியர் என்டிஆருக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை உருவாக்கும். ஏனெனில் இது அவரது 30வது படமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட டீஸர் போஸ்டரில், ஜூனியர் என்.டி.ஆர் நடுக்கடலில் படகில் உறுதியாக நின்று, ஒரு கட்டளையைப் பிறப்பிப்பது போன்ற காட்சி ரசிகர்களை படத்தைக் காணும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

‘தேவாரா’ திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் ஒரு அடையாளமாக மாற உள்ளது. ஜூனியர் என்டிஆரின் இரட்டை வேடமும், பாலிவுட் நட்சத்திரங்களான ஜான்வி கபூர், சைஃப் அலி கான் ஆகியோரின் நடிப்பும் பார்வையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment