தமிழ் சினிமாவில் பலர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக வெள்ளித்திரையில் கலக்கியுள்ளனர். அதற்கு, கமல், ஸ்ரீதேவி, குட்டி பத்மினி தொடங்கி மீனா, ப்ரீத்தி விஜயகுமார் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
அப்படிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாகப் பார்த்த முகங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரேயா ஷர்மா.
அதற்கு முன்பு தெலுங்கில் 2005-ல் வெளியான சிரஞ்சீவியின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரேயா ஷர்மா, 2006 ஆம் ஆண்டு என். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு மகளாக ஐசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
அதன்பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றுள்ள ஸ்ரேயா சர்மா 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயாகுடு’ என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார்.
அதன்பிறகு பல்வேறு முக்கிய விளம்பரப் படங்களில் நடித்துள்ள இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, வழக்கறிஞராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சர்மா, யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி அழகு சார்ந்த குறிப்புகளைப் பதிவிட்டு வருகிறார்.
கயாகுடு படம் எதிர்பார்த்த அளவு போகாத நிலையில், அதன்பிறகு நாகர்ஜுன் தயாரிப்பில் ‘நிர்மலா கான்வென்ட்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஸ்ரேயா.
இப்படத்தின் மூலம் ஸ்ரேயா மிகவும் பிரபலம் ஆனாலும் அதன்பின் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வளவு பேசும் ஸ்ரேயா சர்மா, நல்ல நடிகை என்ற பெயரெடுக்க வேண்டும் என்பதே தன்னுடைய கனவாக இருக்கிறது என்கிறார். ஸ்ரேயா சர்மாவுக்கு வாழ்த்துகள்.
– மகேஸ்வரி, எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.