விமலின் ‘சார்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படத்தை வரும் அக்டோபர் 18-ம் தேதி திரையரங்குகளில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ முதலாக பல வெற்றிப்படங்களை வழங்கிய வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது.

‘கன்னிமாடம்’படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், கல்வியை மையப்படுத்திய அருமையான கமர்ஷியல் திரைப்படமாக, அனைவரும் ரசிக்கும் வகையில், அழுத்தமான படைப்பாக, ‘சார்’ படம் உருவாகியுள்ளது.

இதில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், இப்படத்தின் போஸ்டர், டீசர், டிரெய்லர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் தணிக்கை குழு வழங்கியது.

Comments (0)
Add Comment